வரலாறு

இந்த பக்கத்தில் அறுபத்து மூவரின் வரலாறு மற்றும் பல தகவல்களை தொகுத்து வழங்கி உள்ளோம். ஓம் நமசிவாய!

பூசலார் நாயனார்

திருநின்றவூரில் பிறந்தவர். மனதிலே கோயில் கட்டி எம்பெருமானின் திருவடிகளை அடைந்தார். பல்லவ மன்னன் இவரின் கற்பனையில் கட்டிய கோயிலை போன்று ஒரு கோயிலை திருநின்றவூரிலே கட்டினான். இன்று அக்கோயில் இருதயாலீஸ்வரர் திருக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

பூசலார் நாயனார் வரலாறு: https://www.youtube.com/watch?v=4sdG0Lc1_a8

திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில் வரலாறு: https://www.youtube.com/watch?v=V-mVLzSj9t0

சிறுத்தொண்டர் நாயனார்

இவருடைய இயற்பெயர் பரஞ்சோதியார். பரஞ்சோதியார் நரசிம்மவர்ம பல்லவனிடம் படைத்தளபதியாக இருந்தார். போர்க்கலையில் வல்லவரான இவர், வாதாபிப் போரில் பல்லவ மன்னனுக்காக பெரும் வெற்றி தேடித்தந்தவர். போருக்குப் பின், இறைவன் சிவபெருமானின் இறைபணியில் ஈடுபட ஆரம்பித்தார். இறைவனுக்குத் தொண்டு செய்வதிலும், சிவனடியார்களுக்கு உணவிடுவதிலும் இவர் காட்டிய பணிவினால், இவரை அனைவரும் ‘சிறுத்தொண்டர்’ (இறைவனின் சிறிய தொண்டர்) என்று அழைக்கத் தொடங்கினர். இறைவன் சிவபெருமான் பிள்ளைக்கறி கேட்டதும் அதற்கு சிறுதொண்டரும் அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை இருவரும் சேர்ந்து அந்த பிள்ளைக்கறி அமுதை இறைவனார்க்கு படைத்தனர். இதனை கண்டு மனம் மகிழ்ந்த இறைவன் சிவபெருமான் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். திருச்செங்காட்டங்குடியில் இந்த திருவிளையாடல் நடந்தேறியது.

சிறுத்தொண்டர் நாயனார் வரலாறு: https://www.youtube.com/watch?v=qOPetkmALEE

உத்திராபதீஸ்வரர் கோவில், திருச்செங்காட்டங்குடி வரலாறு: https://www.youtube.com/shorts/Q29XkC6EFls