63 நாயன்மார்களின் வரலாறு

நாயன்மார்களின் வரலாற்று சுருக்கம் மற்றும் பல தகவல்கள்

சிவபெருமானின் திருத்தொண்டர்கள் என்று வணங்கப்படும் அறுபத்து மூவர் வரலாற்றை இந்த பக்கத்தில் பல வரலாற்று தகவல்களுடன் தொகுத்து உள்ளோம். நாயன்மார்களின் வரலாறு மற்றும் அவர்களின் சைவத்தொண்டு என்பது அளப்பரியது.

நால்வர் பெருமக்கள்

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் என்று அன்போடு அழைக்கப்படும் சைவக்குறவர் அவர்களின் இறைத்தொண்டு என்பது ஈடில்லாத இறைசேவை என்றே சொல்லலாம். சைவம் தழைத்தோங்க நால்வரின் தொண்டு என்பது அளப்பரியது மற்றும் அந்த ஈசனின் அருள் பெற்றது என்றே கூறலாம்!

“காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
ஓதுவார் தமை நன் நெறிக்கு உய்ப்பது;
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.”

  • திருஞானசம்பந்த சுவாமிகள்